வடக்குதாமரைகுளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் அதிகாரிகளிடம் பேசினார்
நாகர்கோவில்:
வடக்கு தாமரைகுளம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ஏராள மான வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றம் இடிக்க உத்திரவிட்டிருந்தது.
இதன்படி இந்த பகுதியில் உள்ள வீடுகளை மாற்ற பொதுப்பணித்துறை அதிகா ரிகள் அவகாசம் அளித்தி ருந்தனர். இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் போலீசாரின் பாதுகாப்புடன் அண்ணா நகர் பகுதிக்கு வந்து ஆக்கிர மிப்பில் இருந்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.
இந்தப் பகுதியில் வசிக் கும் மக்களுக்கு ஏற்க னவே வேறு இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டு அங்கு வீடு களும் கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இன்னும் இடங்களும், வீடுகளும் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த வீடு களை மட்டும் விட்டு விட்டு மற்ற வீடுகளை அதிகாரிகள் இடித்து மாற்றினர்.
வீடுகள் இடித்து அகற்றப் பட்ட தகவல் அறிந்த கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.