உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ 72.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2023-08-23 08:51 GMT   |   Update On 2023-08-23 08:51 GMT
  • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
  • 46-வது வார்டுக்குட்பட்ட ஈத்தாமொழி குறுக்கு தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்

நாகர்கோவில், 

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் மேயர் தொடங்கி வைத்தார். 41-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் பி.யூ கார்டன் பகுதியில்ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட புங்கையடி விநாயகர் தெருவில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

46-வது வார்டுக்குட்பட்ட ஈத்தாமொழி குறுக்கு தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 35-வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர் மேல தெருவில் ரூ11.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 27-வது வார்டுக்கு உட்பட்ட ஆசாரிமார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 25-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் அனிலா, வீரசூர பெருமாள், ராணி, கோபால சுப்பிரமணியன், அக்சயா கண்ணன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், ராஜேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News