நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை ஆண்டு விழா
- சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள்
- ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனை கள் செய்துள்ளனர்
நாகர்கோவில், நவ. 22-
டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை 58-வது ஆண்டுவிழா கொண்டா டப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், சாபு சேகரன், ரெஞ்சித் ஜெய சேகரன் தெரிவித்த தாவது:- மருத்துவமனையில் விபத்து காப்பு பிரிவு, இரு தயப்பிரிவு, மகளிர் நலம் மற்றும் மக ப்பேறு பிரிவு, உடல் எடை குறைக்கும் பிரிவு, சர்க்கரை நோயா ளிகள் பிரிவு, செயற்கை கருத்தரித்தல் பிரிவு, பிசியோ தெரபி பிரிவு, சிறுநீரக பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் குமரி மாவட்டம் மற்றும் இல்லாமல் அண்டை மாவ ட்டம், மாநில மக்களும் பயன் பெறுகின்ற னர்.சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள், ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனைகள் செய்துள்ளனர் என அவ ர்கள் தெரிவித்தனர். விழா வில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் இந்திய தபால் துறை ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர், கவுரவ சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காவ ல்துறை தலைவர் சைலே ந்திர பாபு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசீர் பாக்கிய் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சில துறைகள் புதிதாக திறக்கப்பட்டது மற்றும் சில துறைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவர்கள் நினோ ஜார்ஜ், பாலா வித்யா சாகர், திரவியம் மோகன், சந்திர சேகர் இம்மானு வேல், தீபக் டேவிட், கீதா ஆகியோர் அவரவர் துறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.