உள்ளூர் செய்திகள்

புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா

Published On 2023-10-15 08:50 GMT   |   Update On 2023-10-15 08:50 GMT
  • தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.
  • விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி, ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

நாகர்கோவில், அக்.15-

புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் இன்று காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு காப்பு கட்டுதல், 6 மணிக்கு கொலு பூஜை, 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு மகாகாளி அலங்கார பூஜை நடக்கிறது.

மேலும் விழா நாட்களில் அபிஷேகம், தீபாராதனை, கொலு பூஜை, அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 24-ந்தேதி காலை 8.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருஏடு தொடங்குதல், 10 மணிக்கு சக்தி ஹோம பூஜை, பகல் 11.30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு மகிஷாசுரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு இளநீர் அபிஷேகம், 7.30 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி அம்பாளை வலம் வருதல், 25-ந்தேதி காலை 8 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி, ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News