உள்ளூர் செய்திகள்
நாகராஜா, பூதப்பாண்டி கோவில்களில் தேர் செல்லும் வீதியில் மின்வயர்களை புதைவடங்களாக மாற்ற வேண்டும்
- அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கோரிக்கை
- இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
நாகர்கோவில்:
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாகர்கோவில் நாகராஜா கோவில், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி கோவில், வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோவில், பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இக்கோவில்களின் தேர் ஓடும் வீதிகளில் உள்ள மின் வயர்களை புதைவடங்களாக மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.