உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கட்டிட பொருட்களின் கண்காட்சி

Published On 2023-08-03 07:43 GMT   |   Update On 2023-08-03 07:43 GMT
  • நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
  • கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்

நாகர்கோவில் :

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் சார்பாக கட்டிட பொருட்களின் கண்காட்சி நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நாளை (4-ந்தேதி) தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை 3 நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கட்டிட பொருட்களின் கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன் திறந்து வைக்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அகில இந்திய முன்னாள் தலைவர் என்ஜினீயர் வேதானந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் நிறுவன தலைவர் என்ஜினீயர் ஜஸ்டின்பால் கவுரவ விருந்தினராக கலந்துகொள்கிறார். கட்டிட பொருட்களின் கண்காட்சியின் நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க மற்றும் அதன் உபயோகத்தை தெரிந்து கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது. கட்டிட பொருட்களின் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் தலைவர் என்ஜினீயர் காசிநாதன், பில்ட் எக்ஸ்போ தலைவர் என்ஜினீயர் கோவிந்தன், பில்ட் எக்ஸ்போ துணை தலைவர் என்ஜினீயர் சரவணா சுப்பையா, பில்ட் எக்ஸ்போ செயலாளர் என்ஜினீயர் தாமஸ் பிரேம்குமார், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பில்ட் எக்ஸ்போ துணை செயலாளர் என்ஜினீயர் ராஜேஷ் குமார், பில்ட் எக்ஸ்போ பொருளாளர் ஆல்பர்ட் நெல்சன் மற்றும் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள். 

Tags:    

Similar News