உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கோபுரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு - தீயணைக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

Published On 2023-03-06 08:52 GMT   |   Update On 2023-03-06 08:52 GMT
  • கோபுரத்தில் ஏராளமான விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
  • வண்டுகள் கோவிலுக்கு வரும் பக்தர் களை அச்சுறுத்தியதோடு அடிக்கடி கடித்தும் வந்தன.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தின மும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவிலின் பிரதான நுழைவு வாசலான வடக்கு வாசலில் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் ஏராளமான விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இந்த வண்டுகள் கோவிலுக்கு வரும் பக்தர் களை அச்சுறுத்தியதோடு அடிக்கடி கடித்தும் வந்தன.

இது பற்றி கோவில் நிர்வாகத்தினர் கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரிவித்த னர். அதன் பேரில் நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் உத்தரவின் பேரில் தீய ணைக்கும் படை வீரர்கள், ஆறுமுக பெருமாள் தலை மையில் விரைந்து வந்தனர்.

அவர்கள் பல மணி நேரம் போராடி கோபுரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

Tags:    

Similar News