உள்ளூர் செய்திகள்

வில்லுக்குறி பி.பி.சானலுக்கு தண்ணீர் வராததால் கருகிய நாற்றுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-06 09:05 GMT   |   Update On 2023-06-06 09:05 GMT
  • கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
  • தண்ணீர் இல்லாததால் வில்லுக்குறி, பாறையடி பகுதிகளில் நாற்றுகள் கருகும் நிலைக்கு வந்துள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, வில்லுக்குறி பகுதிகளில் நடவு பணிக்காக நாற்று பாவப்பட்டு உள்ளது. பி.பி.சானலுக்கு வராத தண்ணீர்ஒ வ்வொரு ஆண்டும் கன்னிப்பூ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதுபோல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தண்ணீர் திறக்கப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில் வில்லுக்குறி அருகே உள்ள பி.பி. சானலில் தண்ணீர் விடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தண்ணீர் இல்லாததால் வில்லுக்குறி, பாறையடி பகுதிகளில் நாற்றுகள் கருகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கருகிய நாற்றுகளுடன் இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பொ துப்பணித்துறை அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் விஜி தலைமை தாங்கினார். வின்ஸ் ஆன்றோ, செல்லப்பா ஆகியோர் சானலில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி பேசினர். செண்பக சேகரப்பிள்ளை, ராதா கிருஷ்ணன், தங்கப்பன், ரவி, சேகர், முருகேசன், சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், கருகிய நாற்றுடன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 6 நாட்களாகியும் பி.பி. சானலில் தண்ணீர் திறந்து விடவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு சானல்கள் தூர்வா ரப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து கால்வாய்களையும், சானல்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News