கன்னியாகுமரி அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் 'தீ'
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூர் சந்திப்பு பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் கசிந்து கீழே கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அந்த மின்சார டிரான்ஸ்பார்ம ரின் அடிப்பகுதியில் திடீரென தீ பிடித்தது.அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது.இதனால் தீ மளமளவென்று பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. தீயணைக்கும் படை வீரர்கள் தீயை உடனே அணைத்ததால் அந்த பகுதியில் இருந்த ஓட்டல் கடைகள் மற்றும் வீடுகள் தீவிபத்தில் இருந்து தப்பின.