உள்ளூர் செய்திகள்

தேங்கா பட்டணம் துறைமுகத்தில் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம்

Published On 2022-08-31 10:11 GMT   |   Update On 2022-08-31 10:11 GMT
  • கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது.

ஆனால் துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீன வர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலி யானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்க ளுக்குமுன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும், முடிய வில்லை. 2 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்க வில்லை.

இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறிவிக்க ப்பட்டது. இதையடுத்து இன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

காலை முதல் கொட்டி தீர்த்த மழையை பொருட்ப டுத்தாமல் உண்ணா விரதத்தில் மீன வர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமான பேரும் இதில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News