உள்ளூர் செய்திகள்

குமரி மேற்கு கடலோர பகுதியில் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை

Published On 2023-05-24 09:40 GMT   |   Update On 2023-05-24 09:40 GMT
  • வருகிற 1-ந்தேதி முதல் அமல்
  • சட்டம் 1983 மற்றும் திருத்த விதிகள் 2020-ன்படி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் கீழ் தமிழகத்தின் மேற்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஜூன் 1 முதல் ஜுலை 31 வரை (2 நாட்களும் உட்பட) 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப்படகுகள், ஆழ்கடல் விசைப்படகுகள், செவுள் வலை மற்றும் சூரை மீன்பிடி விசைப்படகுகள் மேற்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையிலும் அமல்படுத்தப்படவுள்ளது.

எனவே, மேற்கு கடலோர பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் இந்த 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

ஆகவே, கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடலோர பகுதிகளை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்துவரும் அனைத்து விசைப்படகுகளும் வருகிற 31-ந்தேதிக்குள் தத்தமது மீன்பிடி துறைமுகங்களுக்கு கரை திரும்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்தடையை மீறி மீன்பிடி தொழில் புரியும் மீன்பிடி விசைப்படகுகள் மீதும், 31-ந்தேதிக்குள் கரை திரும்பாத விசைப்படகுகளுக்கு தங்குதள அனுமதி மறுப்பதோடு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்த விதிகள் 2020-ன்படி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News