குளச்சலில் வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்த மீனவர் சாவு
- வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது
- வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது
கன்னியாகுமரி :
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.
இவரது வள்ளத்தில் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த ஆன்சல் (63) மற்றும் குளச்சலை சேர்ந்த ஜோசப் பாத் (65), ஏரோணிமூஸ் (65), கோடிமுனையை சேர்ந்த சிலுவை பிச்சை (53), சைமன்காலனியை சேர்ந்த ஆண்ட்ரோஸ் (72) ஆகியோர் வழக்கம்போல் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன் பிடித்துவிட்டு இன்று காலை இவர்களது வள்ளம் கரை திரும்பியது. குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது.
இதில் வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் உயிரை காப் பாற்றிக் கொள்ள கடலில் தத்தளித்தனர். அப்போது அங்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு வள்ளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.
பின்னர் மீனவர்கள் மற்றொரு வள்ளத்தில் சென்று கவிந்த வள்ளத்தை மீட்டனர். இதில் வள்ளம் சேதமடைந்தது. வள்ளத்திலி ருந்த மீன்கள் கடலில் விழுந் தது. ஆனால் அழிக்கால் மீனவர் ஆன்சல் கரை சேரவில்லை. அவர் கடலில் மாயமாகி உள்ளதாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். தொடர்ந்து முத்துக்கு ளிக்கும் மீனவர்கள் மாய மான மீனவர் ஆன்சலை தேடி வந்தனர். இந்த நிலையில் கொட்டில்பாடு கடல் பகுதியில் பெரிய விளையைச் சேர்ந்த மீனவர் வீசிய வலையில் ஆன்சல் உடல் சிக்கியது. மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான ஆன்சலுக்கு பெல்லாம்மா (55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.