கோதையாறு, குழித்துறையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
- பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
மாவட்டம் முழுவதும் 1500-க்கு மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பியுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சிற்றாறு அணைகள் நிரம்பியதை யடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டது. தற்பொழுது அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது.
இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்ப டும். அணை நீர்மட்டம் இன்று காலை 42.02 அடி யாக உயர்ந்தது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
கோதையாறு, திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எப்பொ ழுது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படும் பட்சத்தில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண் காணித்து வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71.72 அடியாக உள்ளது. அணைக்கு 382 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலை யோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளச்சல், இரணியல், குழித் துறை, அடையாமடை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. இரணியலில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகு படி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
6500 ஹெக்டேரில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து வேளாண் துறை அதிகாரி கள் அவர்களுக்கு தேவை யான விதை நெல்களை தங்குதடையின்றி வழங்கி வருகிறார்கள்.