உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி பகுதியில் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-11-11 07:01 GMT   |   Update On 2023-11-11 07:01 GMT
  • தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

மணவாளக்குறிச்சி :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி, இனிப்பகங்கள் மட்டு மின்றி சிலர் வீடுகள், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக பலகா ரங்கள் தயாரிப்பு தொழி லில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடங்களில் தரமான பலகாரங்கள் தயாரிக்கப் படுகிறதா? என்று ஆய்வு செய்ய மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர விட்டார்.

அதன்பேரில் தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி குமரி மாவட் டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு குளச்சல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி பகுதிகளில் 12 பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் உரிமையாளருக்கு எச்ச ரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டது.

Tags:    

Similar News