உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச போட்டித் தேர்வுகள்

Published On 2023-08-14 09:37 GMT   |   Update On 2023-08-14 09:37 GMT
  • 31ந் தேதிக்குள் பதிவு செய்ய கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
  • ஆசிரியர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக நடைபெற வேண்டும்

நாகர்கோவில், ஆக.14-

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளுக்கு மான பாடதிட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடத்திட்டங்கள் பொதுவாக உள்ளதால் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு வைத்து நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாண வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் 31-ந் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும.

முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சி யாக நடைபெற உள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News