பள்ளிக்கட்டிடங்களை பராமரிக்க அனைத்து துறை சார்பிலும் நிதி - புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன - கலெக்டர் அரவிந்த் தகவல்
- குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளது.இந்த மையங்களில் பல அங்கன்வாடிகள் சேதமடைந்து காணப்படுகிறது
- கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் வெளியேறி வருகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடந்தது.விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேயர் மகேஷ் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகை யில், குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளது.இந்த மையங்களில் பல அங்கன்வாடிகள் சேத மடைந்து காணப்படுகிறது. இருக்கைகள், மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்காக இறச்சகுளம் சாலை தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகிறது. அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. நாகர்கோவில் நகர மக்க ளுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசுகையில் குமரி மாவட்டத்தில் அங்கன்வாடி கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடங்களை மாற்றிவிட்டு நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்பொழுது சேதம் அடைந்த பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கூடங்கள் சேதம டைந்து பராமரிப்பின்றி உள்ளது.அவற்றை பரா மரிக்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.
கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இத னால் விபத்துகள் நடந்து வருகிறது.
எனவே சாலையின் நடுவே போடப்பட்டுள்ள சிமெண்ட் பைப்புகளை அகற்றி விட்டு இரும்பு பைப்புகள் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், இரணியல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எந்த ஆண்டு முடிவடையும். ஏற்கனவே கடந்த கூட்டத்தில் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது வரை பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பரசேரி- இரணியல் சாலையும் மோசமாக உள்ளது. கட்டிமாங்கோடு நொட்டாங்கோடு பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என்றார்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் அரவிந்த் பேசு கையில், குமரி மாவட்டத்தில் பள்ளிக்கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.பள்ளி கட்டிடங்களை பராமரிப்பதற்கு அனைத்து துறைகளின் சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணியை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்படும் போது பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும்.
கடற்கரை சாலையில் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு உள்ள சிமெண்ட் பைப்புகளை அகற்றிவிட்டு இரும்பு பைப்புகள் அமைப்பதற்கு 8 கிலோ மீட்டர் தூரத்திற்குதிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.