உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் 10 இடங்களில் கரைப்பு

Published On 2022-09-04 07:13 GMT   |   Update On 2022-09-04 07:13 GMT
  • குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்தது.
  • கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இதேபோல் வீடுகள், கோவில்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

பிரதிஷ்டை செய்யப்ப ட்ட சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

முதல் நாள் சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது. நேற்று 2-வது நாளாக இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது.

3-வது நாளான இன்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் 10 இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து இன்று மதியம் விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. பீச் ரோடு வழியாக சங்குத்துறை கடலில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

இதையடுத்து நாகராஜா கோவில் திடல் மற்றும் சங்குத்துறை கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது. சுசீந்திரத்தில் இருந்து மாலை 3 மணிக்கே விநாயகர் சிலை ஊர்வலம் புறப்படுகிறது. அங்கிருந்து புறப்படும் ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தன்காடு, ஒற்றையடி, கொட்டாரம், மகாதா னபுரம், பழத்தோட்டம் வழியாக கன்னியாகுமரி திருவேணி சங்கமம் கடற்க ரையில் கரைக்கப்படுகிறது.

இதேபோல் வைகுண்ட புரம், திங்கள் நகர், பார்வதிபுரம், தோவாளை, மேல்புறம் மிடாலம், குலசேகரம், கருங்கல் உள்பட 10 இடங்களில் இருந்து இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு போலீசார் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பட்டாசு வெடிக்கக்கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News