உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நாளை முதல் கரைப்பு

Published On 2022-09-01 07:31 GMT   |   Update On 2022-09-01 07:31 GMT
  • ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்
  • ஊர்வலத்தின் போது பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.

நாகர்கோவில்:

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாவட்ட முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அரை அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

வீடுகளிலும், கோவில்களி லும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொரி கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை மாலை இரு வேளை களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்படு கிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வா கம் 10 இடங்களில் அனுமதி வழங்கி யுள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிகொண்டான் தடுப் பணை, குழித்துறை தாமிர பரணி ஆறு, திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, சின்ன விளை, மண்டைக் காடு, வெட்டுமணி, தேங்காய் பட்டிணம் மற்றும் மிடாலம் ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அந்த பகுதிகளில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு அதன் பிறகு கடலில் கரைக்கப்படும். இதே போல் மேற்புறத் திலிருந்து கொண்ட செல்லப் படும் விநாயகர் சிலைகள் குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

நாளை மறுநாள் 3-ந்தேதி இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை கடலில் கரைக்கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப் பட்டு கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

4-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்குத்துறை கடலில் கரைக் கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆங் காங்கே இருந்து ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை களை மூடுவதற்கும் நடவ டிக்கையை எடுக்கப்பட்டுள் ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி களை பயன்படுத்தக்கூடாது. பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி டெம்போக்கள் மற்றும் டிராக்டர்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள் துணிகள் அழகு சாதன பொருட்களை கரைப்பதற்கு முன்னதாக பிரிக்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது பட்டாசு கள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் சிலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News