உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நாளை முதல் நீர்நிலைகளில் கரைப்பு

Published On 2023-09-21 06:44 GMT   |   Update On 2023-09-21 06:44 GMT
  • நாகர்கோவிலில் போக்குவரத்தை மாற்றிவிட ஏற்பாடு
  • 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

நாகர்கோவில் :

விநாயகர் சதுர்த்தியை யொட்டி குமரி மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

சிவசேனா சார்பில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (22-ந்தேதி) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து புறப்ப டும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தன்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப் பட்டு கரைக்கப்படுகிறது.

23-ந்தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகளும், 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 10 இடங்களில் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை யொட்டி போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையடுத்து போக்குவரத்தை சீர் செய்வது குறித்து போக்கு வரத்து போலீசார் ஆலோசனை மேற்கொண்ட னர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

நாளை (22-ந்தேதி), 23-ந்தேதி, 24-ந்தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா கோவில் திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலை களான ஒழுகினசேரி, வட சேரி, டவர் சந்திப்பு, வேப்ப மூடு, அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், செட்டிகுளம், சவேரியார் சந்திப்பு, கம்பளம், பீச் ரோடு, ஈத்தாமொழி பிரிவு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற் கரைக்கு செல்வதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மேலே குறிப்பிடப்பட்ட சாலைக ளில் போக்குவரத்து நெரி சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே வெளியூர் பயணம் செல்பவர்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சி களுக்கு செல்பவர்கள் தங்களது பயணநேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி பஸ் நிலையத்திலிருந்து அண்ணா பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இடலாக்குடி, நாயுடு மருத்துவமனை, ரெயில்வே ரோடு வழியாக கோட்டார் ரெயில் நிலை யத்திலிருந்து இயக்கப்படும்.

மேலும் ராஜாக்கமங்க லம், ஆசாரிப் பள்ளம், பார்வதிபுரம் மார்க்கமாக அண்ணா பஸ் நிலையம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பஸ் நிலையத்தி லிருந்து இயக்கப்படும்.

மேலும் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை மார்க்க மாக அண்ணா பஸ் நிலை யம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரி வித்துக்கொள்ளபடுகிறது. வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட நேரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை (சிலை கரைப்பு ஊர்வல மானது நாகர்கோவில் மாநகரை கடந்து செல்லும் வரை) வழித்தடமாற்றம் தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News