உள்ளூர் செய்திகள்

சங்குதுறை கடற்கரையில் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்

Published On 2023-09-25 07:20 GMT   |   Update On 2023-09-25 07:20 GMT
  • இன்று காலை மீண்டும் கரைப்பு
  • கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலைகளை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் கடலில் கரைத்து உழவாரப்பணி செய்யப்பட்டது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்பு கள் சார்பிலும், பல்வேறு ஊர் கோவில் சார்பாகவும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான விநாயகர் சிலைகளை வீடுகளிலும், வீதிகளிலும் பிரதிஷ்டை செய்து, பூஜைக்கு வைத்து அதனை கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களாக கடற்கரைகளில் கொண்டு பூஜைக்கு வைத்திருந்த விநாயகரை கரைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

அப்படி கடற்கரையில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்ற பிறகும், அலை களின் சீற்றத்தால் மீண்டும் கடற்கரைக்கு திரும்பி ஏராளமான விநாயகர் சிலைகள் சங்குத்துறை கடற்கரையில் மிதந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியும் இருந்த விநாயகர் சிலைகளை இன்று காலை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா தலைமையில் சங்குதுறை கடற்கரையில் கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலை களை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பா ளர்கள் மீண்டும் அதை கடலில் கரைத்து உழவாரப்பணி செய்யப் பட்டது.

Tags:    

Similar News