உள்ளூர் செய்திகள்

கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா

Published On 2023-11-04 07:22 GMT   |   Update On 2023-11-04 07:22 GMT
  • சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடந்தது
  • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்

நாகர்கோவில் ;

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா நடைபெற்றது. குழித்துறை கத்தோலிக்க மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேராசிரியை சிமிமோள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதி கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழ்மொழி சிறப்பு குறித்தும், அனைவருக்கும் படிப்பு முதன்மையாக இருக்கவேண்டும் என்றும் எடுத்து கூறினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் மலையாள திரைநட்சத்திரமுமான நலீப் ஜீயோ விழாவில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் கல்லூரி தாளாளர் மரியவில்லியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். விழாவில் கவின் நுண்கலை மன்ற மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பேராசிரியர் ெஜய சுரேண்ராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரியவில்லியம், முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News