உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி அருகே கோழிகளை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு
தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
கன்னியாகுமரி :
சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது60). இவரது வீட்டில் மலை பாம்பு ஒன்று கோழி கூட்டினுள் புகுந்து கோழியை விழுங்கி கொண்டு வெளியே செல்ல முடியாமல் கோழிக்கூட்டினுள் பதுங்கி இருந்தது. இது குறித்து ராஜன் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த மலைப்பாம்பை தீயணைக்கும் படை வீரர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.