அக்டோபர் 21-ந்தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- ஓய்வூதியர் புகார் மனுக்களை 6-ந்தேதிக்குள் அனுப்பலாம்
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிப்பிட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோ பர் 21-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் அமைந்துள்ள வருவாய் கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.
அக்கூட்டத்தில் தமிழ் நாடு அரசு துறை களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதி யம் தொடர்பாக தீர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குறைகளை பரிசீலனை செய்வதுடன் அவர்கள் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவ டிக்கை மேற்கொண்டு தீர்வு செய்திட தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.
குமரி மாவட்டத் தில் மாநில அரசு துறை அலுவலகங்கள், அரசு நிதி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய பலன்கள் தீர்வு செய்யப்படாமல் இருந்தால் அவ்விபரங் களை இரட்டை பிரதிக ளில் வருகிற 6-ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் கிடைக்குமாறு அனுப் பிவைக்க வேண்டும். 6-ந்தேதிக்கு பின்னர் வரும் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஓய்வூதியதாரர் தங்கள் மனுவில் ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய புத்தக எண், ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத் தின் பெயர், கோரிக்கை நிலுவையில் உள்ள அலு வலகம், ஓய்வூதியம் பெற் றுவரும் கருவூலம் ஆகிய விபரங்களுடன் கோரிக் கையைத் தெரிவிக்குமாறு ஓய்வூதியதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் வெளி மாவட்டங் களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் கோரிக்கை மனுக்கள், மாநில அரசு சார்பற்ற துறைகளில் மற் றும் தமிழ்நாடு அரசு போக் குவரத்துக்கழகம், மின்சார வாரியம் போன்ற கழகம் மற்றும் வாரியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.