மார்த்தாண்டம் சாலையில் சாலையோரத்தில் வெகு நாட்களாக நிற்கும் கனரக வாகனங்கள்
- இடையூறாக இருப்பதால் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி பழுது பார்ப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
கன்னியாகுமரி :
பேச்சிப்பாறை முதல் மார்த்தாண்டம் வரை யிலான ரோடு எப்போதும் வாகனங்கள் செல்லும் நெருக்கடியான சாலை யாகும். காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. மற்றும் மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு இந்த சாலை வழியாக தான் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.
குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் ரோட்டோரம் கனரக மற்றும் சிறிய வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் அதிக அளவில் உள்ளது. இந்த வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி பழுது பார்ப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
சில வாகனங்களை வேலை முடிந்ததும் உடனே கொண்டு செல்வது இல்லை. ரோட்டோரம் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பல நாட்கள் ரோட்டோரம் நிற்கிறது. குறிப்பாக மாத்தாண்டம் முதல் கீழ்பம்பம் வரை அதிக அளவில் ரோட்டின் இரண்டு பக்கமும் கனரக வாகனங்களை ரோட்டோம் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
எனவே போக்குவரத்து போலீசார் அந்த வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து வாகனத்தை ரோட்டோரத்தில் இருந்து மாற்றி வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த பகுதியில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரோட்டோரம் கனரக வாகன பழுது பார்க்கும் உரிமையாளர்களை கலந்து ஆலோசனை செய்து வாகனங்களை நிறுத்த கூடாது என்றும் அதை மீறி நிறுத்தும் வாகன ஒட்டிகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.