குமரி மாவட்டத்தில் காலை, மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- தினமும் கேரளாவுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், மண், எம்-சாண்ட், என்-சாண்ட் போன்றவை செல்கிறது
திருவட்டார், ஜூன்.28-
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், மண், எம்-சாண்ட், என்-சாண்ட் போன்றவை செல்கிறது. அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக ஏற்றி ஓவர் லோடாக கேரளாவுக்கு பல்வேறு வழிகளில் செல்கிறார்கள். இந்த வாகனங்கள் தினமும் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது.
அதிக அளவு லோடுகள் ஏற்றி செல்வதால் குமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய் விடும் அளவிற்கு தினமும் வெட்டி எடுக்கிறார்கள். அதன்பிறகு மழையின் அளவும் குறைந்து விடும் அபாயம் உள்ளது.
உள்ளூர் மக்கள் அதிக விலை கொடுத்து கல் மண் வாங்க வேண்டிய நிலை கேராளவுக்கு அதிக வாகன ங்களில் கனி மவளங்கள் செல்வதால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை உள்ளது. அதனால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வீடுகட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்க்கும் தேவையான பொருள்கள் கிடைப்பது இல்லை. கனரக வாக னங்கள் அதிவேகமாக செல்வதால் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பல விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
இந்த கனரக வாகனங்கள் காலை மாலை வேளைகளில் கேரளாவுக்கு அதிவேகமாக செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்வ தால் இந்த வாகனங்கள் அந்த வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. சில இடங்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ரோட்டை கடந்து செல்லும்போது கனரக வாகனங்கள் செல்வதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள். எனவே மாவட்ட கலெக்டர் தலை யிட்டு இந்த கனரக வாக னங்கள் காலை, மாலை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சென்றுவரும் நேரங்களில் செல்ல தடை விதிக்க வேண்டும். என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.