பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள்
- 43 பயனாளிகளுக்கு இம்முகாம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார் பில், திருவட்டார் வட்டம், தும்பக்கோடு வருவாய் கிராமம் உன்னியூர் அரசு நடுநிலைப் பள்ளி வளா கத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது.
முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றும், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க முகாமினை பார்வையிட்டும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
ஒவ்வொரு மாதமும் கடைகோடி வருவாய் கிராமங்களில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன்பெறு வதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும்.
மேலும், வேளாண் மைத்துறை, தோட்டக்க லைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்தும், அவர்கள் விவசா யம் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளவும் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம் பேருதவியாக இருக்கிறது.
ஊரக பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கான முழு முயற்சியினை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதோடு, அனைத் துத்துறை அலுவலர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
43 பயனாளிகளுக்கு இம்முகாம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்து கொண்டு, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அரசின் திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.