உள்ளூர் செய்திகள்

குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேசுக்கு மாலை மற்றும் கிரீடம் அணிவித்து தி.மு.க.வில் இணைந்த பாரதிய ஜனதா இளைஞர்கள்.

குமரி மாவட்டத்தில் 100 கோவில்களில் ரூ.48 கோடியில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது

Published On 2022-11-06 10:06 GMT   |   Update On 2022-11-06 10:06 GMT
  • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தியது தி.மு.க.வின் ஆட்சியில் தான்
  • மேயர் மகேஷ் தகவல்

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் இரவி புதூர் ஊராட்சி பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் தி.மு.க.வில் இணை யும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய செயலாளர் மதியழகன் ஏற்பாட்டில், மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் முன்னிலையில் அரிகரன், பாரத், ஆறுமுகம் உள்ளிட்ட 50 இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட துணை செய லாளர் சோமு, பொதுக் குழு உறுப்பினர் ஜீவா னந்தம், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க. இளைஞர்களுக்கு மேயர் மகேஷ் சால்வை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் தான் கோவில்கள் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 450 ஆண்டுகளாக கும்பாபி சேகம் நடைபெறாமல் இருந்த திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவி லுக்கு கும்பாபிசேகம் நடத்தியது தி.மு.க.வின் ஆட்சியில் தான் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பில்லாத 100 கோவில்களை புனரமைக்க ரூ.48 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News