உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்க அனுமதி

Published On 2023-09-05 06:59 GMT   |   Update On 2023-09-05 06:59 GMT
  • பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடு
  • ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் :

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். குமரி மாவட்டத்தில் விநாய கர் சதுர்த்தி விழா விமர்சை யாக கொண்டா டப்படுவது வழக்கம்.

இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப டும். விநாயகர் சதுர்த்தி யையொட்டி தற்பொழுது இரணியல் கண்ணாட்டு விளை, சுங்கான்கடை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அன்ன விநாயகர், கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், தாமரை விநாயகர் என பல வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வருகிற 18-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைக ளில் கரைக்க 3 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 23-ந்தேதி தேதியும், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 24-ந்தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படு கிறது.

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே பிர திஷ்டை செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை அலங்கரிக்க கூடாது.

நீர்நிலைகள் மாசுபடு வதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்ப டுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு அந்தந்த பகுதி போலீசாரிடம் உரிய அனுமதிபெற வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிறர் மனதை புண்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் 11 இடங்களில் கரைப்பதற்கு போலீசார் அனுமதித்துள்ள னர்.

சிலைகள் கரைக்க உள்ள இடங்களில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News