உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடை வீதிகளில் புத்தாடைகளை வாங்க வந்தபோது எடுத்த படம் 

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது

Published On 2022-10-09 11:08 GMT   |   Update On 2022-10-09 11:08 GMT
  • மப்டி உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன.

நாகர்கோவில்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களில் தரிசனம் செய்தும், இளைஞர்கள் முதல் புதுமணத் தம்பதியினர், பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண் டாடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மங்குடி ரோடு, மீனாட்சி புரம், கலெக்டர் அலுவலக ரோடு, மணிமேடை, வடசேரி பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க குவிந்திருந்தனர்.அனைவரும் குடும்பத் தோடு வந்து புத்தாடை களை எடுத்துச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை யையடுத்து துணிக்கடை களில் புத்தம் புது கலெக் சன்கள் விற்பனைக்கு வந்தி ருந்தது. புத்தாடைகளை குடும்பத்தோடு வந்து எடுத்து மகிழ்ந்தனர். கடை வீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து நாகர் கோவில் நகரில் வடசேரி, செட்டிகுளம், கோட்டார், மணிமேடை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை இரணியல் உள்பட மாவட் டத்தின் முக்கிய பகுதி களில் உள்ள அனைத்து கடை களிலும் இன்று பொது மக்களின் கூட்டம் அதிகமா கவே காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடைவீதிகளில் போலீசார் மப்டி உடைகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

பிக்பாக்கெட் திருடர்கள் அதிக அளவு நாகர்கோவில் நகரப் பகுதியில் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக் கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையம் உட்பட அனைத்து பஸ்நிலையங்களிலும் பஸ்களில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் தங்களது செயின் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

பட்டாசு கடைகளிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில் இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.பட்டாசு கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கடை உரிமையாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

பட்டாசுகள் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News