உள்ளூர் செய்திகள்

குமரியில் விளைநிலங்களை பிளாட்டுகளாக மாற்றுவதால் விவசாய சாகுபடி பரப்பளவு குறைகிறது

Published On 2023-06-27 06:24 GMT   |   Update On 2023-06-27 06:24 GMT
  • விளை நிலங்களை அதிகாரிகள் பிளாட்டுகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் நெல், வாழை, தென்னை விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் ரப்பர் விவசாயமும் செய்ய ப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 7500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சாகுபடி பரப்பளவு 5500 ஹெக்டே ராக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விளைநில ங்கள் எல்லாம் பிளாட்டு களாக மாற்றப்படுவது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுசீந்திரம், தேரூர், திருப்பதிசாரம், பீமநகரி, சுங்கான்கடை பகுதிகளில் வயல்வெளிகள் மணல்க ளால் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்ப ட்டுள்ளது. இதனால் நெல் விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப்ப ட்டுள்ளது. இதை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினார்கள்.

சுங்கான்கடை, திருப்பதிசாரம் பகுதிகளில் விளை நிலங்களை அதிகாரிகள் பிளாட்டுகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.

எனவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதி வழங்கப்பட்ட பிளாட்டு களை ரத்து செய்ய வேண்டு ம் என்று கூறியிரு ந்தார்கள். இதைத்தொடர்ந்து கலெக்டரும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வயல்கள் மணல் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவ தாக விவசாயிகள் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கு றியாகி வருகிறது என்றும் கூறினர். இதுகுறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்று வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க னவே நாங்கள் கலெக்டரிடம் மனு அளித்தோம். இது தொடர்பாக அதிகாரிகள் பறக்கை, லாயம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். தற்பொ ழுது பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்ற மணல் கொட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக திருப்பதிசாரம் பகுதியில் தற்பொழுது அதிக அளவு விளைநில ங்களில் மணல் நிரப்பி வருகிறார்கள். இதுதொ டர்பாக கலெக்டரிடம் விரைவில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்றுவதற்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

விளைநிலங்கள் உள்ள பகுதிகளை பிளாட்டுகளாக மாற்ற ஏற்கனவே வழங்கியுள்ள அனுமதியை மறுபரி சீலனை செய்து அந்த பிளாட்டிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தோம். அவரும் இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். விவசாயத்தை பாதுகாக்க அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News