உள்ளூர் செய்திகள்

நாகரில்.ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் ஜீப்பின் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து அழைத்துச்சென்ற போலீசார்

Published On 2023-07-01 10:40 GMT   |   Update On 2023-07-01 10:40 GMT
  • 60 வயதை எட்டியதும் அந்த ஊழியர்கள் ஓய்வு அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்
  • இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

நாகர்கோவில் :

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகும். 60 வயதை எட்டியதும் அந்த ஊழியர்கள் ஓய்வு அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி நேற்று தமிழக முழுவதும் போலீஸ் துறை, அரசு அலுவலகங்களில் பணிபுரிந்த ஏராளமானோர் ஓய்வு பெற்றனர்.

குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் போலீஸ் துறையில் பணிபுரிந்த ஊழியர்கள் என பலரும் ஓய்வு பெற்றனர். ஓய்வு பெற்றவர்களை அவர்களுடன் பணிபுரிந்தவர்கள் உற்சாக மாக வழி அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

சக ஊழியர்கள் ஓய்வு பெற்றவரை கட்டி தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்து பூரண நலத்துடன் வாழ வேண்டும் என்று கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் போக்கு வரத்து ஒழுங்குபடுத்தல் பிரிவு போலீஸ் நிலையத்தில் சாமிதோப்பு அருகே கோட்டைவிளையை சேர்ந்த டேவிட் சந்திரபோஸ் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரும் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நேற்று மாலை போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பிரிவு போலீஸ் நிலையத்தில் பிரிவு உபச்சார விழா நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் இன்ஸ்பெக்டர் அருண், சிறப்பு இன்ஸ்பெக்டர் டேவிட் சந்திரபோசை வாழ்த்தினார். பின்னர் அவரை சக போலீசார் வீட்டிற்கு அழைத்து க்கொண்டு விடுவதற்கு தயாரானார்கள். அப்பொழுது இன்ஸ்பெக்டர் அருண் தனது போலீஸ் வாகனத்தில் அவரை அழைத்து சென்று விட்டு விட்டு வருமாறு கேட்டுக்கொண்டார். டேவிட் சந்திரபோஸ் முதலில் மறுப்பு தெரிவிக்கவே போலீசார் அவரை அந்த ஜீப்பில் அழைத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் அமரக்கூடிய முன் இருக்கையில் அமர வைத்து அவரை கவுரவப்ப டுத்தி வீட்டிற்கு அழைத்து ச்சென்ற சம்பவம் நெகி ழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்து பலரும் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருணுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News