நாகர்கோவிலில் இன்று கடை வீதிகளில் குடும்பத்தோடு குவிந்த பொதுமக்கள்
- புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர்
- தீபாவளியையொட்டி பல விதமான புத்தாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.
தீபாவளி பண்டி கைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிக மாக காணப்பட்டது.நாகர்கோவில், செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், மணிமேடை, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
குடும்பத்தோடு ஏராள மானோர் புத்தாடை எடுக்க வந்திருந்தனர்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். தீபாவளியை யொட்டி பல விதமான புத்தாடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு கடைகளிலும் பட்டாசு வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். பேக்கரிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மார்த்தாண்டம், இரணியல், குளச்சல், அஞ்சு கிராமம், தக்கலை உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கடைவீதிகள் களை கட்டி இருந்தன.
கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி னார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கடைவீதிகளில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் அனைவரும் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.