உள்ளூர் செய்திகள்

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் பயிற்சி முகாம் தொடக்கம் - மாறி வரும் தொழில் நுட்பங்களுக்கேற்ப மாணவ-மாணவிகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

Published On 2022-10-06 09:38 GMT   |   Update On 2022-10-06 09:38 GMT
  • ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலியலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு
  • பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட படித்த- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

நாகர்கோவில் :

நாகர்கோவில், சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் தொடக்க விழா கலெக்டர்அரவிந்த் தலைமையில் நடந்தது. மேயர்மகேஷ் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டும். ஏற்றத்தாழ்வு களுக்கு இடம் கொடுக்காமலும், ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலி யலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு திறன் திட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் நோக்கமே இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வாதாரம், பொருளா தாரத்தில் முன்னேற் றம் அடைய செய்வதேயாகும்.

மேலும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து முதலீட்டை கொண்டு வந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய சூழலில் தொழில்நுட்பம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. மாணவ, மாணவியர்கள் அதற்கேற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வேலையானது அதிக வருவாய் தரும் வேலையாகும் .நிறுவனங்களின் திறன் தேவைக்கும் பணியாளர்களின் உண்மையான திறமைக்குமான இடை வெளியைக் குறைக்க . தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து தமிழ்நாடு ஐ.சி.டி. அகாடமி, இளைஞர் வேலைவாய்ப்பு திறன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியினை மாணவர்கள் மிகுந்த ஈடுபாட் டுடனும் , ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ள வேண்டும்.

பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட படித்த- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள். சூழ்நிலைகளை பாதிக்காத வகையில் வேலைநாடுநர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் . பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு , தகுதியான வேலை வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்கங்கள் வசதி செய்து தரப்படும். படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடை ய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ( தேசிய நெடுஞ்சாலை ) ரேவதி, தலைமை செயல் அதிகாரி ஹரி பால சந்திரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா, இம்மானுவேல், புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர்மகேஸ்வரன் , பொது மேலாளர் ( ஐ.சி.டி அகாடமி) ஸ்ரீகாந்த், பூர்ண பிரகாஷ், சரவணன், ரெமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News