மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் ஜூனியர் தடகள போட்டிகள்
- பள்ளிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
- புனித ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசையும் வென்றது.
நாகர்கோவில் :
மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. குழுமமான தக்ஷின் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் தடகள விளையாட்டு போட்டிகள் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் விளையாட்டு திடலில் நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளை பள்ளி தாளாளர் தில்லைச்செல்வம் தொடங்கி வைத்தார். போட்டியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களிலிருந்து 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவர்கள் பங்கேற்றனர்.
தக்ஷின் சகோதயா தலைமை ஒருங்கிணைப்பாளர் சுனில்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பிரனேஸ் உ நோபிள் மேற்பார்வையிட்டனர். போட்டியில் கன்னியாகுமரி அமிர்தா வித்யாலயம் முதல் பரிசையும், மணவாளக்குறிச்சி புனித ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசையும் வென்றது.
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் உடற்கல்வி குழுமமம் முத்தரசி, செல்வி, ஓசானியோ மற்றும் கோபி விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தனர். பள்ளியின் இயக்குநர்கள் முகில் அரசு, ஆடலரசு, பள்ளி முதல்வர் தீபசெல்வி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி தாளாளர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.