உள்ளூர் செய்திகள்

2 சப்பரங்களுடன் அலங்கார தேர்ப்பவனி நடந்தபோது எடுத்த படம்.

சின்னமுட்டத்தில் 2 சப்பரங்களுடன் கடல் புதுமை மாதா தேர்பவனி

Published On 2022-10-10 07:43 GMT   |   Update On 2022-10-10 07:44 GMT
  • 10 நாள் திருவிழா நிறைவு
  • வழி நெடுகிலும் நேர்ச்சை செலுத்தி மக்கள் வழிபாடு

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திரு விழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழா நிறைவு நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார். காலை 7.30மணிக்கு பெரு விழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞான பிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரை ஆற்றி னார். காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.

புனித ஜெபஸ்தியார் புனித தோமையார் ஆகிய 2 சப்பரங்கள் முன் செல்ல கடல் புதுமை மாதா தேரில் பவனி வந்தார். ஆலயத்துக்கு முன்பு இருந்து தொடங்கிய இந்த பவனி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை மாலை 5 மணிக்கு வந்து அடை ந்தது. வழி நெடுகிலும் மக்கள்நேர்ச்சைசெலுத்தி வழிபட்டனர். இதில் சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அந்தோணி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்க ருணைஆசீர் நடந்தது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமை யார் ஆலய பங்குஅருட்பணியாளர், பங்கு அருட்பணி பேரவை யினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News