திற்பரப்பு அருவியில் 7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
- தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள் விடுமுறை விடப்பட்டது.
- தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
மறு கால் திறந்து விட்ட தால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரண மாக அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள் விடுமுறை விடப்ப ட்டதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திரண்டு வந்தனர். இதனால் 7 நாட்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் குளித்து விட்டு குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து வந்தனர். அதன்பிறகு அருவியின் மேற்பகுதியில் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில் பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.