அன்ன வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
3-ம் திருவிழா நாளான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி பஜனையும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்க ப்பட்ட அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா சென்றார்.
வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழி பட்டனர். விழாவின் 4-வது நாளான இன்று (திங்கட்கி ழைமை) அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு பால், தயிர், எண்ணெய், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள்பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சா மிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வெள்ளி காம தேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு கன்னியா குமரி பிரம்ம குமாரிகள் பிரஜாபிதா ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பி ல் பக்தி பல்சுவை நிகழ்ச்சி யும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவில் திருவிழா காலங்களில் 10 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்குரிய புனித நீர், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்ர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்க ரிக்கப்பட்ட யானை மீது வைத்து கொண்டு வரப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வைகாசி விசாக 4-ம்திருவிழாவான இன்று வரை புனித நீரை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரவில்லை. அதற்கு பதிலாக கோவில் அர்ச்சகர் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே பகவதி அம்மன் கோவிலுக்கு புனித நீரை கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி பக்தர்களின் மனதை வேதனை அடைய செய்துஉள்ளது.
இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது விழாவுக்கு யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.