நூற்றாண்டு விழாவையொட்டி அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதியின் ஓவியம் வரையும் போட்டி
- மாணவ-மாணவிகள் பங்கேற்பு
- கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி :
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட கருணாநிதியின் உருவப்படத்தை ஓவியமாக வரையும் வண்ணம் தீட்டுதல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு வண்ணங்கள் தீட்டினர்.
சிறப்பாக வண்ணம் தீட்டிய 5 மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஓவியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்பாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சகாய ஜோஸ்பின், மாதா, ராணி ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.