ஸ்பெயினில் நடக்கும் இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க குமரி வீரர் பயிற்சி
- விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்
- 85 கிலோ எடை பிரிவில் கண்ணன் 2-வது இடத்தை பிடித்தார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே தாமரைக்குட்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). உடற்கல்வி பயிற்சியாளர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். 9.5 டன் எடை கொண்ட லாரியை கயிற்றால் கட்டி இழுத்தது. காரை தூக்கி சென்றது உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்திருந்தார்.
பஞ்சாப்பில் நடந்த உலக இரும்பு மனிதன் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதல் 85 கிலோ எடை பிரிவில் கண்ணன் 2-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி ஸ்பெயினில் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதில் அகில இந்திய அளவில் கண்ணன் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்லேண்ட் கிராஸ், லாக்பிரஸ், பார்மர்ஸ் வாக், ஒன் ஆர்ம் டம்பிள் பிரஸ், ஏ பால் டூ ஷோல்டர் ஆகியவற்றில் பயிற்சி செய்து சாதனை படைத் தார்.
இந்த நிகழ்ச்சியை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.