உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தேசிய இணைய பாதுகாப்பு மையம் தொடக்கம்

Published On 2022-06-05 08:04 GMT   |   Update On 2022-06-05 08:04 GMT
  • தேசிய இணைய பாதுகாப்பு மையத்தை கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.
  • காவல் துறையில் தொழில் நுட்பத்தின் தேவை மற்றும் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

நாகர்கோவில் :


நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தேசிய இணைய பயன்பாட்டு பாதுகாப்பு மையத்தை கல்லூரி தலைவர் பொன் ராபர்ட் சிங் வழி காட்டுதலின் படி கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். காவல் துறையில் தொழில் நுட்பத்தின் தேவை மற்றும் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக புதுடில்லியைச் சேர்ந்த தேசிய இணைய பாதுகாப்பு தர நிர்ணய இயக்குனர் முனை வர் காளிராஜ் நாயுடு மற்றும் கேரள மாநில தேசிய இணைய பாதுகாப்பு ஆய்வு மையத் தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய இளைஞர்களின் வாழ்வில் இணையத்தின் பயன்பாடுகளும் அதில் உள்ள பாதிப்புகளையும், ஆபத்துகளையும் மாணவர்களும், பெற்றோர்க ளும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் அருள்சன் டேனியல் முதன்மையுரை வழங்க, கணினி துறை பேராசிரியர் ஐசக் சாஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News