குமரி மாவட்டத்தில் 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத்
- 1933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
- காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது
நாகர்கோவில் :
நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதி அசான் முகமது, நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவர், மணிமேகலை வழக்கறிஞர் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவிலில் 6 பெஞ்சுகளில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், விபத்து காப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மோட்டார் காப்பீடு இன்சூரன்ஸ் மற்றும் காசோலை வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது. காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.68 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோல் தக்கலை, பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1933 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு உள்ளது.