உலக இருதய தினத்தை முன்னிட்டு கால்வின் மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி
- நாளை மறுநாள் நடக்கிறது
- முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நாகர்கோவில் :
உலக இருதய தினத்தை முன்னிட்டு கால்வின் மருத்துவமனை சார்பில் நாகர்கோவிலில் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நாளை மறுநாள் (29-ந்தேதி) நடைபெற உள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆண்கள், பெண்கள், 14-வயதுக்குட் பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என போட்டிகள் நடக்கிறது.
29-ந்தேதி காலை 5 மணிக்கு போட்டியாளர்கள் பதிவு செய்யப்பட்டு காலை 6 மணிக்கு பட்டகசாலியன் விளை கால்வின் மருத்துவமனையில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்குகிறது. போட்டி யில் பங்கேற்ப வர்களுக்கு டி-சார்ட், காலை உணவு, மெடல் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்ப வர்களுக்கு ரொக் கத்தொகை வழங்கப் படுகிறது. முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கி றது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கால்வின் மருத்துவமனை சார்பில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.