உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

சென்னையில் மீட்கப்பட்ட 2 மாணவிகளுக்கு இன்று மருத்துவ பரிசோதனை

Published On 2022-11-01 09:35 GMT   |   Update On 2022-11-01 09:35 GMT
  • கடத்திச் சென்ற ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
  • குமரி போலீசார் அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த அவரது தோழியான மற்றொரு மாணவியும் திடீ ரென ஒரே நாளில் மாயமானார்கள்.

இது தொடர்பாக மார்த்தாண்டம் மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 மாணவிகளையும் தேடி வந்தனர்.

அப்போது மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது இருவரும் ஒரே எண்ணுக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது.அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்திய போது, அது திருவட்டார் குட்டக்குழி காலனி பகுதியைச் சேர்ந்த வினு (வயது 22) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான வினுவை தேடிச் சென்ற போது, அவரும் வீட்டில் இல்லை. எனவே அவர் தான் 2 மாணவிகளை கடத்திச் சென்றிருக்கலாம் என ேபாலீசார் கருதினர்.

இதையடுத்து பினுவின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்த னர். இதில் அந்த எண் சென்னை திருவான்மியூரில் இருப்பது கண்டு பிடிக்க ப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 2 மாணவி களுடன் வினு இருப்பது தெரிய வந்தது. மாணவி களை மீட்ட போலீசார், அவர்களையும் வினுவையும் குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். பின்னர் 2 மாணவிகளும் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2 மாணவி களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வினு தனது வலையில் வீழ்த்தியதும், பின்னர் 2 பேரையும் ஓன்றாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

மேலும் ரவுடி வினு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதனை மாணவிகளிடம் கூறாமல் அவர்களுடன் பழகி வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரவுடி வினுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ள தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மாணவி களும் இன்று மருத்துவ பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News