குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் திட்ட முகாம்
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கையினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தினை சிறு பான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி அன்றும், திருவட்டார் தாலுகா அலு வலகத்தில் 28-ந்தேதி அன்றும், கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் 24-ந்தேதி அன்றும், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந்தேதி அன்றும், தோவாளை தாலுகா அலுவலகத்தில் 31-ந்தேதி அன்றும் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும், சிறப்பு முகாம்களில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங் கள் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.