உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டியில் மாயமான பள்ளி மாணவிகள் சேலத்தில் மீட்பு

Published On 2023-07-04 08:29 GMT   |   Update On 2023-07-04 08:29 GMT
  • மாணவிகள் இருவரும் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை.
  • தாயார் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர்

நாகர்கோவில் :

பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இருவரும் ஒரே பள்ளி யில் படித்து வருகிறார்கள். தினமும் ஒன்றாக பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று மாணவிகள் இருவரும் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில் மாணவிகள் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் நேற்று பள்ளிக்கு வராதது தெரியவ ந்தது. இதனால் மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இதுதொ டர்பாக வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவிகளையும் தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மாணவி ஒருவர் தனது தோழி ஒருவருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் சேலத்தில் இருப்ப தாக கூறினார்.

இந்த தகவல் மாயமான மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் உடனடியாக சேலம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மாயமான மாணவிகளின் புகைப்படத்தையும் அங்கு அனுப்பி வைத்தனர். சேலம் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டனர். மாணவிகள் மீட்கப்பட்ட தகவல் பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பூதப்பாண்டி போலீசார் மற்றும் மாணவியின் உறவினர்கள் சேலத்துக்கு விரைந்தனர்.

இன்று காலை சேலம் போலீஸ் நிலையத்தில் இருந்த மாணவிகளை பூதப்பாண்டி போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது தாயார் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களை பூதப்பாண்டிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News