மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவர்கள் சாதனை
- 12 வயதிற்கு உட்பட்ட பந்து எறிதல் போட்டியில் மாணவன் தெய்விக் ரோஷன் முதல் பரிசு
- ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டினர்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் நாகர்கோவில அண்ணாவிளையாட்டு ஆரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளுக்கு மவுண்ட் லிட்ரா பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
12 வயதிற்கு உட்பட்ட பந்து எறிதல் போட்டியில் மாணவன் தெய்விக் ரோஷன் முதல் பரிசையும் மாணவி ஜோவிஷா தெரேஸ் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் பரிசையும் வென்றனர். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ரித்திக் ரோஷன் 600 மீட்டர் ஓட்டபந்தயத்தில் முதல் பரிசையும், 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் காட்வின் 300 மீட்டர் பந்தயத்தில் முதல் இடத்தையும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தையும் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் அல்ஹம்கான் மூன்றாம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குநர்கள், முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டினர்.