கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. கோரிக்கை
- அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள்
- அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை
நாகர்கோவில் : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கேரளா சமஸ்தானம் இருந்தபோதிலிருந்து அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை. அதனை கேட்டு அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அவர்களது கோரிக் கையை அரசு ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த 2-ந்தேதி வடசேரி அருகே அருந்ததியர் காலனி முன்பு போராட்டம் நடத்தி னர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எனவே அரசும், மாவட்ட நிர்வா கமும் அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கிருஷ் ணன்கோவில் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.