உள்ளூர் செய்திகள்

காவலர் உலக தடகளப் போட்டியில் நாகர் பெண் ஏட்டு தங்கம் வென்றார் - போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

Published On 2022-07-26 07:33 GMT   |   Update On 2022-07-26 07:33 GMT
  • போலீசில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் கிருஷ்ண ரேகா
  • 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்று உள்ளார்

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட போலீசில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் கிருஷ்ண ரேகா. இவர் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் உயரம் தாண்டுத லில் கிருஷ்ணரேகா தங்கப் பதக்கம் வென்றார். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செல்போன் மூலம் கிருஷ்ணரேகாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பதக்கம் வென்ற கிருஷ்ண ரேகா ஏற்கனவே 2019-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் தீயணைப்பு வீரர்கள் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார். மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News