குமரி மாவட்டத்தில் 1695 வாக்குச் சாவடி சிறப்பு முகாம்களில் இன்று பெயர் சேர்ப்பு-நீக்கம்
- ஆதார் எண் இணைப்பதிலும் வாக்காளர்கள் ஆர்வம்
- வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் பணி கள் முடிவ டைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், விளவங் கோடு, பத்மநாப புரம், கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு மொத்தமாக 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. பெயர் சேர்த்தல் மட்டுமின்றி நீக்கம் செய்தல் திருத்தம் போன்ற பணிகளும் முகாமில் செய்யப்பட்டன. எனவே பலரும் முகாமில் பங்கேற்றனர்.
புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆர்வத்துடன் வந்தனர். இதனால் அனைத்து முகாம்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க ஏற்கனவே அறிவு றுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பலரும் ஆதார் எண்ணை இணைத்து வரு கின்றனர். குமரி மாவட் டத்தில் இதுவரை 69 சதவீதம் பேரே வாக்கா ளர் பட்டி யலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்ப திலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாளை(13-ந் தேதி)யும் இந்த முகாம் நடக்கிறது,