உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

Published On 2023-10-12 06:59 GMT   |   Update On 2023-10-12 06:59 GMT
  • 15-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
  • அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

கன்னியாகுமரி :

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான நவ ராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்கு கிறது. இந்த திருவிழா 24-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அதி காலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

11.30 மணிக்குஅலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை யும் நடக்கிறது. 1-ம் திருவிழாவான 15-ந்தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

8 மணிக்கு பஜனையும், மாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு ஆன்மீக அருள் உரையும், இரவு 7 மணிக்கு வயலின் இசையும், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலை மான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

2- ம்திருவிழாவான 16-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீகஅருள் உரையும் இரவு 7மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 3-ம் திருவிழாவான 17--ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாக னத்தில்எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 4-ம் திருவிழாவான 18-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் காமதேனு வாக னத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

5-ம் திருவிழாவான 19-ந் தேதி மாலை 6 மணிக்குஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்காம தேனு வாகனத்தில் எழுந்த ருளி பவனி வருதலும் நடக்கிறது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் மீது கூடை-கூடையாக மலர் தூவி வழிபடுவார்கள்.

6-ம் திருவிழாவான 20-ந்தேதி காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும் 9 மணிக்கு அம்மன் வெள்ளி க்காம தேனு வாகனத்தில் எழுந்த யருளி பவனி வருதலும் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 21-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்திருளி பவனி வருத லும் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 22-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கி றது.

அதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதான புரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கி றது. கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவே கானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமாத்தலிங்கபுரம், தங்க நாற்கரசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதான புரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்றடைகிறது.

அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்க புரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப் பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்க மத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி, துளசிதரன் நாயர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வரு கிறார்கள்.

Tags:    

Similar News